மதுரை : மதுரை மாநகர காவல்துறைக்கு உதவும் நோக்கில் அனைத்து காவல் நிலையங்களிலும் பாய்ஸ் கிளப் துவங்கப்பட்டு மதுரை மாநகரில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் குற்றங்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை அண்ணாநகரில் உள்ள பாய்ஸ் கிளப் துவங்கி ஆறு ஆண்டுகள் நிறைவு பெறுவதால் அவற்றின் துவக்கவிழாவை நேற்று மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் துவக்கிவைத்தார்.
மேலும் குழந்தைகளுக்கு கதை, கவிதை, கட்டுரை, ஓவியம் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் காவல் ஆணையர் அவர்கள் பரிசுகள் வழங்கி பொதுமக்களுக்கு காவல்துறை எப்போதும் பாதுகாப்பாகவும் நல்ல நண்பர்களாகவும் இருப்பார்கள் எனவும், மேலும் அவசர காலங்களில் பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு காவல்துறையால் அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் அவற்றின் பயன்பாடு மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறை பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை