தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையம், தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட ஆதரவற்ற மற்றும் அடையாளம் தெரியாத 17 ஆண் சடலங்கள் மற்றும் 5 பெண் சடலங்கள் என மொத்தம் 22 சடலங்களுக்கு, தஞ்சாவூ காவல் கண்காணிப்பாளர் திரு. ஆர். ராஜாராம் தலைமையில் இறுதி மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையம் சார்பாக வடக்கு வாசல் ராஜகோரி இடுகாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தஞ்சாவூ காவல் கண்காணிப்பாளர் திரு. ஆர். ராஜாராம் அவர்கள் தலைமையில், மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா, மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி, உதவி ஆய்வாளர் முத்துக்குமார், சார்பு ஆய்வாளர் மனோகரன், தலைமை காவலர்கள் அப்துல்லா, குருமூர்த்தி மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்று, அடையாளம் தெரியாத ஆதரவற்ற 22 பிரேதங்களுக்கு மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் பார்வையில் தெரியாத ஆனால் சமூகத்தின் நலனுக்காக செயல் படும் இத்தகைய மனிதாபிமான பணிகளை காவல்துறையினர் பொறுப்புணர்வோடும், மரியாதையோடும் முன்னெடுத்தது பாராட்டுக்குரியது. உயிரில்லா உடல்களுக்கும் மரியாதை காட்டும் இந்த மனப்பான்மை, காவல்துறையின் சமூகப் பங்களிப்பு மற்றும் கருணையுள்ள செயல்முறைகளின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து

திரு.முகமது மூசா