திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான பூலம் குளத்தில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்துள்ளார். பின் இறந்தவரின் உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில், மூன்றடைப்பு உதவி ஆய்வாளர் திரு. அபினேஷ் அவர்கள், பூலம் கிராம நிர்வாக அலுவலர் திரு. ஆறுமுக கனி அவர்கள் மற்றும் தலைமை காவலர் திரு. பாண்டி, இரண்டாம் நிலை காவலர் திரு. அசாருதீன் ஆகியோர் தாமாக முன்வந்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு, பிரேத பரிசோதனை செய்து, பாணாங்குளம் பகுதியில் உடலை நல்லடக்கம் செய்தார்கள்.