வேலூர்: வேலூர்மாவட்டம் காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய காட்பாடி பகுதியில் கடந்த 01.09.2021 விடியற்காலையில் காட்பாடி TO திருவலம் ரோடு செல்வம் சிமெண்ட் குடோன் அருகில் அடையாளம் தெரியாத ஒரு நபர் ரோட்டில் இறந்து கிடப்பதாக
அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஓட்டி காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க அதன்பேரில் சம்பவ இடம் சென்று பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்ததில்
இறந்த நபர் மீது காயங்கள் இருந்ததால் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் விருதம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆதர்ஷ் தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை செய்து.
இறந்து போன நபர் காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த சின்ன குழந்தை என்பவரின் மண்ணாண்டி என்பதை கண்டுபிடித்தனர் .மேலும் அவரின் சந்தேக இறப்பிற்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு அப்பகுதியில் உள்ள பல கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்ததில்.
ஒரு மர்ம நபர் இறந்து போன மன்னனை பாட்டில் மற்றும் கல்லால் தாக்கிக் கொலை செய்து பிரேதத்தை அப்பகுதியில் உள்ள ரோட்டில் இழுத்து வந்து விட்டுச் செல்வது போன்று தெரியவந்ததால் வழக்கை சந்தேக மரணம் வழக்கிலிருந்து கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரின் போட்டோவை வைத்து சுற்றுவட்டார பகுதியில் விசாரணை செய்ததில்
கொலைசெய்த நபரான சக்திவேல் சுந்தர் பிச்சை (எ) அதிலோ என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை செய்ததில்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்லும் போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்த அன்றைய தினம் மது போதையில் அவரை பின்தொடர்ந்து பாட்டில் மற்றும் கல்லால் அடித்து அவரை கொலை செய்து பின்பு வாகன விபத்தில் இறந்தது போன்ற நாடகத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டதாக கூறியதன் பேரில் அவனை காட்பாடி நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி பின்பு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கை திறமையாக கையாண்டு இறந்து போன நபர் குற்றவாளி மற்றும் இறப்பிற்கான காரணம் ஆகியவற்றை வெகு நேர்த்தியான முறையில் கண்டுபிடித்ததற்காக தனிப்படையினரை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் அலுவலகத்திற்கு நேரடியாக வரவழைத்து சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.