தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் தகவல் பதிவு உதவியாளர்/ வரவேற்பாளர் (Data Entry Operator/Receptionist) பணி நியமனம் செய்யப்பட்ட 28 பேருக்கான 3 மாத அடிப்படை பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும்போது மரணமடைந்த காவல்துறை மற்றும் அமைச்சுப்பணி அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் தமிழக அரசு தகவல் பதவி உதவியாளர்/ வரவேற்பாளர் (Data Entry Operator/Receptionist) பணி நியமனம் செய்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 28 பேர் மேற்படி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 3 மாத காலம் அடிப்படை பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வின்போது காவல்துறை அலுவலக அமைச்சுப்பணி கண்காணிப்பாளர் திரு. செல்வக்குமார், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, ஆகியோர் உடனிருந்தனர்.