திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த (30.06.2022,)-ம் தேதி பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட விஸ்வநாதபுரம் பெட்ரோல் பங்கில், வேலை செய்து கொண்டிருந்த மகேஸ்வரன் என்பவரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம், மாதவபுரத்தை சேர்ந்த மீனாட்சிநாதன் (24), என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பணகுடி காவல் ஆய்வாளர் திருமதி.மகாலெட்சுமி, அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில்,( 25.07.2022) அன்று குற்றவாளி, குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.