திருவள்ளூர் : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி த்திட்டத்தில் உள்ளடக்கிய கல்வி கூறின் வழியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 1.32 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். APWD ACT 2016-ன் படி 21 வகை மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் பொருத்தமான கல்வி பயிற்சி வழங்குதல் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கும் சிறப்பு கல்வி பயிற்சிகள் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றி உதவிட பணிந்து 1. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 8% ஊதியம் உயர்த்தி வழங்கி RC.No (11.07.2025) செயல்முறை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அனைத்துநிலைப் பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கிய போதும் உள்ளடங்கிய கல்வி பணியாளார்களுக்கு மட்டும் விடுபட்டுள்ளது கடந்த இரண்டு வருடங்களாக ஊதியம் உயர்வு இல்லாமல் பணி செய்து வரும் எங்களுக்கு இந்த முறையாவது கருணை கூர்ந்து உள்ளடங்கிய கல்வி சிறப்பு பயிற்றுநர்களுக்கும், இயன்முறை மருத்துவர்களுக்கும் மற்றும் சிறப்பு பயிற்சி மையம் பராமரிப்பாணர் உதவியாளார்களுக்கும் ஊதியம் உயர்த்தி ஆணை வழங்கிட 2. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் ஆகிய இருவரும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணி ஆணை வழங்கிட ஆணையிட்டும் ஒருங்கிணைத பள்ளிக் கல்வி திட்டம் வழங்கிட மறுத்து வருகின்றது.
பணி ஆணை வழங்கி உதவிட 3. நீதி மன்ற ஆணையின் அடிப்படையில் தொழிலாளர் வைப்பு நிதி PF பிடித்தம் செய்திட சென்னை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு உத்தரவுயிட்ட பின்னரும் மீதமுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கிட தாமதிக்கப்பட்டு வருகின்றது. பணியில் இணைந்தநாள் முதல் தொழிலாளர் வைப்பு நிதி வழங்கி உதவிட 4. உள்ளடங்கிய கல்வியில் மாற்றுத்திறன் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊர்திப்படி மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கி உதவிட, உச்ச நீதிமன்ற ஆணை திரு ரஜ்னிஷ்குமார் பாண்டே தீர்ப்பின் அடிப்படையில் நாடுமுழுவதும் சிறப்பு பயிற்றுநர்கள் பணி திறந்தரம் செய்யப்பட்டு வருகின்றது அது போன்று தமிழ்நாட்டிலும் சிறப்பு பயிற்றுநர்களை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் பணி செய்துவரும் எங்களையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கி உதவிட வலியுறுத்தி மீஞ்சூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் மீஞ்சூர் வட்டாரத்தின் சார்பில் ஜமுனா, செபாஸ்டின், சுகந்தி, ரம்யா ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு