திண்டுக்கல் : “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்னும் பாரதியார் பாடலை உணர்த்தும் வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய
11.12.19 திண்டுக்கல் மாவட்டம் M.V.M மகளிர் கலைக்கல்லூரியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் தமிழ்நாடு காவல் துறையால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ” KAVALAN SOS ” செயலியின் நன்மைகள் குறித்தும், செயலியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
நிகழ்ச்சியில் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்களும் கலந்துகொண்டு மாணவிகளுக்கு “KAVALAN SOS ” செயலி குறித்து விழிப்புணர்வு அறிவுரைகளை கூறினார்கள். நிகழ்ச்சியில் கல்லூரியில் பயிலும் 600 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு KAVALAN SOS செயலியை பயன்படுத்துவோம் என உறுதி அளித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா