சிவகங்கை : சிவகங்கை ,கல்லல் ,காளையார் கோவில், திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர், கண்ணங்குடி, சாக்கோட்டை, ஆகிய வட்டாரங்களில் கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் இ.பாக்கிய மேரி கல்லல் வட்டாரத்திலும் மாவட்ட தலைவர் ஜெயமங்களம் சிவகங்கை வட்டாரத்திலும் மாவட்ட பொருளாளர் லட்சுமி திருப்பத்தூர் வட்டாரத்திலும் மாநில செயற்குழு உறுப்பினர் கௌசல்யா சிங்கம்புனரி வட்டாரத்திலும் மாவட்டத் துணைத் தலைவர் தவமலர், மானாமதுரை வட்டாரத்திலும் மாவட்ட துணை தலைவர் சித்ரா எஸ்.புதூர் வட்டாரத்திலும் மாவட்ட இணைச் செயலாளர் சித்ரா திருப்புவனம் வட்டாரத்திலும் மாவட்ட இணை செயலாளர் ராதா காளையார் கோவில் வட்டாரத்திலும் மாவட்ட துணைத் தலைவர் மலர் கண்ணங்குடி வட்டாரத்திலும் மாவட்ட இணைச் செயலாளர் கலைச்செல்வி சிவகங்கை வட்டாரத்திலும் மாவட்ட துணை தலைவர் சசிகலா கல்லல் வட்டாரத்திலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகள் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வழங்க வேண்டும் என்று அரசாணை இருந்து இன்று வரை சிவகங்கை மாவட்டத்தில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை உடனடியாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.3 பத்து குழந்தைகளுக்கு குறைவாக இருக்கின்ற மையங்களை மூடுகின்ற திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். குழந்தைகள் குறைவாக இருக்கின்ற மையங்களை அருகில் இருக்கும் மையங்களோடு இணைக்கின்ற திட்டத்தை கைவிட வேண்டும்.பத்தாண்டு பணி முடித்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களாக பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும். 6,19 93 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பணியாளர்களின் பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி