ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ம் நாள் போலீஸ் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது . அத்தினத்தில் போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டு எல்லையில் உயிர்த் தியாகம் செய்த போலீஸ் வீரர்களுகாக நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் போலீஸ் துறையின் சார்பாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்.
1954 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (CRPF) சேர்ந்த ஒரு உதவி ஆய்வாளரான கரம் சிங் (Karam Singh) தலைமையிலான 10 காவலர்கள் சீனாவின் படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் லடாக் எனப்படும் 16,000 அடி உயரம் கொண்ட இடத்தில் சீன ராணுவத்தினருடன் போரிடும் போது உயிர் நீத்தனர்.
இவர்களின் நினைவாக காவல் தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது.பல மத்திய அமைச்சர்களும், உள்துறைச் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (21.10.2025) சென்னை, காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் திரு, நா. முருகானந்தம், இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தீரஜ் குமார், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் திரு. ஜி. வெங்கடராமன், இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. ஆ. அருண், இ.கா.ப., காவல்துறை உயர் அலுவலர்கள், பணியின் போது உயிர் நீத்த காவல்துறையினரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் காவலர் வீர வணக்க நாள் செய்தி , “நாள் நேரம் பார்க்காமல்; ஊண் உறக்கம் மறந்து; உயிரையும் துச்சமென எண்ணிப் பொதுமக்களின் பாதுகாப்புக்காகப் பணியாற்றும் கடமையுணர்ச்சி மிகுந்த காவலர்கள் அனைவருக்கும் #PoliceCommemorationDay-இல் எனது வீரவணக்கங்கள்!”
ஸ்ரீபெரும்பதூரிலிருந்து நமது போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

திரு. பாக்கியராஜ்