சிவகங்கை : அகில இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு 28.11.2019 முதல் 29.11.2019 ஆம் தேதி வரை உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. அகில இந்திய அறிவியல் மாநாட்டில் தமிழக காவல் துறை சார்பாக சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் I.P.S, அவர்கள் மற்றும் தேவகோட்டை உதவி கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் I.P.S, அவர்களும் இணைந்து குற்றம் மற்றும் குற்றவியல் இணைய அமைப்பு (CCTNS) மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு (ICJS) ஆகியவற்றின் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இம்மாநாட்டில் எடுத்துரைத்தனர்.
மேலும் குற்ற தடுப்பு நடவடிக்கையில் டோல்ஸ்கோப் என்ற புதிய தொழில்நுட்பத்தை தமிழக காவல்துறை சார்பில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் தேவகோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் அவர்களும் இணைந்து நாடு முழுவதும் தொடங்கி வைத்தனர். மேலும் இம்மாநாட்டில் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
K. ராமசாமி