விழுப்புரம் : கடந்த மாதம் 19 முதல் 24 வரை டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவில் நடைபெற்ற காவலர்களுக்கு இடையேயான ஜூடோ கிளஸ்டர் போட்டியில் கலந்து கொண்ட நமது மாவட்ட ஆயுதப்படை காவலர் திரு. வருண்குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இன்று நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஶ்ரீநாதா இ.கா.ப., அவர்கள் வருண் குமாரை நேரில் அழைத்து வாழ்த்தினார். உடன் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கனகராஜ் மற்றும் ஆய்வாளர் திரு.முத்துக்குமரன், இருந்தனர்.