சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 44வது அகில இந்திய காவல் குதிரைப்படை போட்டி மற்றும் குதிரைப்படை காவல் பணித்திறனாய்வு போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 7 பதக்கங்கள் மற்றும் 2 சுழற்கோப்பைகள் வென்ற சென்னை பெருநகர காவல் குதிரைப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார். இந்த நிகழ்வில் கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு K. ஜோஷி நிர்மல்குமார், இ.கா.ப., போக்குவரத்து காவல் இணை ஆணையாளர்கள் திரு P. விஜயகுமார், இ.கா.ப., (தெற்கு), திருமதி திஷா மிட்டல், இ.கா.ப., (வடக்கு), துணை ஆணையாளர்கள் திரு D.N. ஹரிகிரன் பிரசாத், இ.கா.ப., (நலன்), திரு J. ஜெயகரன் (பொறுப்பு: ஆயுதப்படை) உள்ளிட்ட பல காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















