சென்னை : பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற 71-வது அகில இந்திய காவல் குழு விளையாட்டுப் போட்டிகளில் யோகா பிரிவில் காவல் ஆய்வாளர் ஆனந்த லட்சுமி வெள்ளி பதக்கமும், காவலர்கள் கங்காதேவி, தில்ஷாத் பேகம், தீபா மற்றும் சிஜி ஆகியோர் வெண்கல பதக்கமும், பெண் உதவி ஆய்வாளர் தனுஷ் கண்ணகி, காவலர் மோனிஷா மற்றும் சுமதி ஆகியோர் செபக் டக்ரா விளையாட்டு பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றனர். மேலும் மத்திய பிரதேசம் போபாலில் நடைபெற்ற பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆய்வாளர் ஹேமா மாலா தங்கப்பதக்கத்தை வென்றார். பதக்கம் வென்று தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்த காவலர்களை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர். செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் பாராட்டி வெகுமதி வழங்கினார்கள்.