தர்மபுரி : சென்னையில் கடந்த 31ஆம் தேதி மாநில அளவில் காவலர்களுக்கான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல காவல்துறை அணி சார்பில் கலந்து கொண்ட முதல் நிலை காவலர் திரு.பாக்கியநாதன் என்பவர் 77 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தார். இதனையடுத்து அகில இந்திய அளவிலான ஹரியானாவில் நடக்க இருக்கும் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார் சாதனை படைத்த காவலர் பாக்கியநாதன் அவர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.