ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட எஸ்பி திரு. சக்தி கணேசன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பெயரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா புத்தூர் சுரட்டை பாளையத்தைச் சேர்ந்த வீரமணி (26) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டி வலசு நாயக்கர் தெரு காமராஜ் (26) திருச்செங்கோடு இறையமங்கலம் காட்டு வேலம்பாளையம் நாயக்கர் தெருவைச் சேர்ந்த முரட்டுக்காளை (40) அதே பகுதியைச் சேர்ந்த விஜி (21) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் வீரமணி, காமராஜ் ஆகியோர் மீது ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, ஈரோடு டவுன், கருங்கல்பாளையம், சூரம்பட்டி, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதேபோல் தங்கராஜ், விஜி ஆகியோர் மீது தாலுகா காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் வடக்கு காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உள்ளது. இவரிடமிருந்து 59 பவுன் நகையை போலீசார் மீட்டு, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.