செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கிராண்ட் ஹோட்டலில் போலீசார் ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன் BE அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஹோட்டல் விடுதி ரிசார்ட் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாமல்லபுரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS அவர்களும், மாமல்லபுரம் உட்கோட்ட காவல் அதிகாரிகளும் மற்றும் 75-க்கும் மேற்பட்ட ஹோட்டல், விடுதி உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.