மதுரை : மதுரை மாவட்டம் 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மாவட்ட SP திரு.N.மணிவண்ணன்.ஐபிஎஸ்., அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உட்கோட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஒன்று சேர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை வைத்து பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்களுக்கு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும், தலைக்கவசத்தின் அவசியத்தை பற்றியும், போக்குவரத்து விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வு, அறிவுரைகளையும் செய்து வந்த நிலையில், உசிலம்பட்டியில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து DSP திரு.ராஜா அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்