திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.நல்லசாமி மற்றும் தலைமை காவலர் திரு.தாமரைக்கண்ணன், முதல் நிலை காவலர் திரு.விஜயகுமார் ஆகியோர்கள் இணைந்து பொதுமக்களிடையே கொரோனா நோய்த்தொற்று குறித்தும், அதிலிருந்து எப்படி நம்மை பாதுகாப்பது பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.
மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் எனவும் எடுத்துக்கூறி வாகனங்களில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா