இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம் தேதி காவலர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
காவலர் தினத்தை முன்னிட்டு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாக, நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ராஜேஷ் கண்ணா அவர்களுக்கு IPS அவர்களுக்கு, நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா, தென் இந்திய தலைவர் ( ஒளிபரப்பு பிரிவு) திரு. பாபு அவர்கள் காவலர் தின வாழ்த்து தெரிவித்தார்.
இராணிப்பேட்டை மாவட்ட அரக்கோணம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.யாதவ் கிரிஷ் அவர்களுக்கு நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா, தென் இந்திய தலைவர் ( ஒளிபரப்பு பிரிவு) திரு. பாபு மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட பொது செயலாளர் திரு. கஜேந்திரன் ஆகியோர் காவலர் தின காவலர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டினர். பின் அங்குள்ள காவலர்களுக்கும் கேக் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.பழனிவேல், மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கமல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் காவலர் தின சுவரொட்டிகள் மூலம் காவல்துறையினர் அனைவருக்கும் காவலர் தினம் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
https://policenewsplus.in/இராணிப்பேட்டையில்-டிசம்/