நெல்லை : நெல்லை பெருமாள்புரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.செழியன் அவர்கள் மற்றும் போலீசார், 30-01-2020-ம் தேதியன்று, பாளை மல்லிகா காலனி அருகே, வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டாட்டா 909 மினி வேன் வந்து கொண்டிருந்ததை நிறுத்தி சோதனை செய்த போது, ரெட்டியார்பட்டியில் இருந்து அனுமதி இல்லாமல் செம்மணல் கொண்டு வந்தது தெரிய வந்தது. உடனடியாக வேன் ஓட்டுநரான திருமலை கொழுந்துபுரத்தை சேர்ந்த சுப்ரமணியனை கைது செய்து, 1.5 யூனிட் செம்மணல் மற்றும் டாட்டா 909 மினி வேன் வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தார்கள்.