அரியலூர்: தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப செல்வதற்கு தமிழக அரசு வெளியிட்ட இணையதள பக்கத்தை பற்றி அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து கயர்லபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ராஜா அவர்கள் உதவி ஆய்வாளர் திரு. நெப்போலியன் அவர்கள், ஆகியோர் கோத்தாரி சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த வெளிமாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் தாங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் வரை அனைவரும் பொறுமையுடனும் காத்திருக்குமாறும், காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு இ-பாஸ் வலைத்தள இணைப்புகள்
1. சொந்தமாக நான்கு சக்கர வாகனம் உள்ளவர்கள் மாநிலத்திற்கு உள்ளே அல்லது பிற மாநிலத்துக்கோ செல்ல வேண்டி,
https://tnepass.tnega.org
2. பிற நாட்டிலிருந்து இந்தியா திரும்ப வேண்டியவர்கள்.
https://nonresidenttamil.org
3. வேறு மாநிலத்திலிருந்து தமிழ்நாடு வர வேண்டியவர்கள்.
https://rttn.nonresidenttamil.org
4. தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியவர்கள்.
https://rtos.nonresidenttamil.org