மதுரை: மதுரை மாநகரில் அமைந்துள்ள அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் இன்று 20.11.2019 மாலை 06.30 மணிக்கு மதுரை மாநகர காவல்துறை சார்பாக “வெல்வோம்” என்ற குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது.
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் குறும்படத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திரு. E. கார்த்திக் IPS., காவல் துணை ஆணையர் (ச&ஒ), திரு.K .பழனிக்குமார் காவல் துணை ஆணையர் (குற்றம்), திரு.K. சுகுமாறன் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), முனைவர்.திரு.ஆ.மணிவண்ணன் காவல் உதவி ஆணையர் சிறப்பு நுண்ணறிவு பிரிவு, முனைவர். திரு.M .தவமணி கிறிஸ்டோபர் , முதல்வர் & செயலாளர் , அமெரிக்கன் கல்லூரி, திரு.P. சமுத்திரகனி , திரைப்பட இயக்குநர், திரு.M. சசிகுமார் திரைப்பட இயக்குநர், தெப்பக்குளம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் திரு. சிவராமகிருஷ்ணன், திரு.M. அசோக்குமார், ஆனந்தம் UTV , மதுரை “NON STOP CREATORS “ குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
[embedyt] https://www.youtube.com/watch?v=8uB_w4zlA4c[/embedyt]
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை