நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வரும் பேருந்தில் வீட்டை விட்டு வெளியேறிய அந்த மூன்று சிறுமிகள் வருவதை அறிந்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறுமிகளை பத்திரமாக மற்றும் விரைவாகவும் மீட்பதற்கு நாகப்பட்டினம் உட்கோட்டம் வெளிப்பாளையம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் திரு தேவேந்திரன் தலைமையில் காவலர்கள் திரு சண்முகம்(PC-131)மற்றும் பழனிமுருகன்(PC1299) ஆகிய மூன்று பேர் கொண்ட தனிப்படை அமைந்து சிறுமிகளை பத்திரமாக மீட்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு மூன்று தனிப்படை காவலர்கள் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் சிறுமிகளின் புகைப்படத்துடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மதுரை மாவட்டம் செல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியின் அம்மா இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது வேளாங்கண்ணியில் வசித்து வருகிறார். மேலும் சிறுமியின் அப்பா வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு மதுரையில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் இன்று (19.12.19) மாலை 3.00 மணியளவில் சிறுமி தனது அப்பா வைத்திருந்த ரூபாய் 1,20,000/- பணத்தை எடுத்து கொண்டு யாருக்கும் தகவல் சொல்லாமல் தனது தோழிகளான மேற்படி இருவருடன் வேளாங்கண்ணியில் உள்ள அந்த சிறுமியின் அம்மாவை பார்க்க பேருந்தில் ஏறி நாகப்பட்டினம் வந்துள்ளனர்.
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு 10.45.மணியளவில் பேருந்திலிருந்து இறங்கிய சிறுமிகளை பேருந்து நிலையத்தில் தயார் நிலையில் இருந்த தனிப்படை காவலர்கள் தங்கள் வைத்திருந்த புகைப்படத்தின் அடிப்படையில் அந்த மூன்று சிறுமிகளை அடையாளம் கண்டு சிறுமிகள் மூவரையும் மீட்டனர் விசாரித்த போது. மேற்படி தகவலை கூறியுள்ளனர்.
மேலும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் மீட்கப்பட்ட சிறுமிகளை பத்திரமாக நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முன்னிலையில் ஒப்படைத்தனர். பின்னர் சிறுமிகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளபட்டது.
மேலும் மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் சிறுமிகள் பெற்றோர்களுக்கு தகவல் தரப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறுமிகள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிவரும் காலங்களில் இது போன்ற விபரீதமன செயல்களில் ஈடுபட கூடாது எனவும், பெற்றோர் அனுமதி இன்றி எங்கும் செல்ல கூடாது எனவும், படிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், குழந்தைகள் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும் எனவும் நன்கு அவர்களின் குணநலன்கள் நாள்தோறும் கவனிக்க வேண்டும் எனவும், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள்.
மேலும் சிறுமிகளை பத்திரமாக மீட்ட நாகப்பட்டினம் உட்கோட்டம் வெளிப்பாளையம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட தனிப்படை காவலர்களின் சிறப்பான பணியை பாராட்டி மகிழ்ந்தார்கள். மேலும சிறுமியின் பெற்றோர்கள் குழந்தைகள் காணாமல் போன தகவல் கிடைத்த மணி நேரத்தில் விரைந்து கண்டுபிடித்த நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
இது தொடர்பாக இத்தகவல்கள் மதுரை மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு சிறுமிகள் அழைத்துச்செல்ல மதுரை மாவட்ட காவல்துறையினர் நாகப்பட்டினம் மாவட்டம் வந்தனர், அவர்களிடம் குழந்தைகளை பத்திரமாக ஒப்படைக்க பட்டுள்ளது.
மேலும் இது போன்ற புகார்களுக்கு கீழ் கண்ட தொலைபேசி எண்களில்
100,
1098,
9498100905,
8939602100,
7997700100,
04365242999,
04365248119,
24 க்கு மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கேட்டுகொண்டர்கள்.
நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.பிரகாஷ்