சென்னை: சென்னை பெருநகர காவல் சிறார் மன்ற சார்பாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மன்றங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதன்பேரில், வெற்றி பெற்ற காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா 23.11.2019 அமைந்தகரையிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கி, சிறப்புரையாற்றினார். முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சி முடித்து, சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது. காவல் ஆணையாளர் அவர்கள் மாணவ, மாணவிகளுடன் ஒன்றாக அமர்ந்து, உணவருந்தி, கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (வடக்கு) திரு.ஆர்.தினகரன்,இ.கா.ப., மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.பி.விஜயகுமாரி,இ.கா.ப., அண்ணாநகர் துணை ஆணையாளர் திரு.எம்.எஸ்.முத்துசாமி,இ.கா.ப., துணை ஆணையாளர்கள் திரு.எஸ்.ராஜேந்திரன்,இ.கா.ப., (பூக்கடை), திருமதி.எஸ்.ரவளிபிரியா காந்தபுனேனி, இ.கா.ப., (மாதவரம்), திருமதி.ஜி.சுப்புலட்சுமி (வண்ணாரப்பேட்டை), உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள், சிறார் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.