விருதுநகர் : மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம் தேதி காவலர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியரும், மற்றும் தேசிய காவலர் தின நிறுவனமான திரு. அ. சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சமூக சேவகர்கள் பிரிவு விருதுநகர் மாவட்ட தலைவர் திரு.முனியாண்டி காவல் நிலையங்களுக்கு சென்று காவலர்களுக்கு காவலர் தின வாழ்த்து கூறி உற்சாகப்படுத்தினார்.
விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.M. மனோகர் அவர்களுக்கும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும், விருதுநகர் மாவட்டம் துணை கண்காணிப்பாளர் அலுவலக சக காவலர்களுக்கும், நரிக்குடி ஒன்றியம் உள்பட்ட காவல் நிலையம் காவலர்களுக்கும், வீரசோழன் காவல்துறை சார்பு ஆய்வாளர் அவர்களுக்கும், ஏ முக்களம் காவல்துறை சார்பு ஆய்வாளர் அவர்களுக்கும், திருச்சுழி காவல்துறை சார்பு ஆய்வாளர் அவர்களுக்கும் காவலர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் காவலர் தின சுவரொட்டிகள் மூலம் காவல்துறையினர் அனைவருக்கும் காவலர் தினம் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.