விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை உட்கோட்டம் மல்லாங்கிணர் B4 காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ( 26-01-2020 ) 71வது குடியரசு தினத்தன்று கிராமப்புற வசதியற்ற படிக்கின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படும் வகையிலும், பொதுமக்கள் காவல்துறையினர் நல்லுறவை பலப்படுத்தும் வகையிலும் காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும், பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் காவல் துணை கண்காணிப்பாளர் உயர்திரு G.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் புதிய நூலகம் திறக்கப்பட்டது.
இவ்விழாவினை மல்லாங்கிணர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர், அசோக் குமார் மற்றும் நிலைய காவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்