திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி IAS அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள், திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்கள். 15.02.2020 இன்று 31 -வது சாலை பாதுகாப்பு வாரம் விழாவினை தொடக்கி வைத்து சிறப்பான முறையில் நடைபெற்றது. சாலை பாதுகாப்பு வார விழாவில் நெடுஞ்சாலை துறையினர், கட்டுமானம் துறையினர், பராமரிப்பு துறையினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், மாணவர் காவல் படை (SPC) அமைப்பு, பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பேரணியாக நடந்து சென்றனர். கையில் பதாகைகள் ஏந்திக்கொண்டு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களிடையே வழங்கி கொண்டு சென்றனர். மேலும் இச்செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்