கோயம்புத்தூர் :நம் தினசரி வாழ்க்கையில், பயணங்களில், குறிப்பாக நகர்ப்புர சாலைகளில், இந்தச் சைகை விளக்கை சந்திக்காமல் சென்றதில்லை. அது அளிக்கும் அந்தச் சிறு நிமிட தாமதம், அதனால் நாம் அடையும் எரிச்சல் காரணமாக, அதனைப் பற்றி நாம் அதற்கு மேல் சிந்தித்ததில்லை. சைகை விளக்கில் பொதுவாக, சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை வண்ணங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை மூன்றும், ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாறி மாறி வரும்.
சிவப்பு – நில். அனைத்து வாகனங்களும் சாலையின் அகல வாக்கில் வரையப்பட்டிருக்கும் வெள்ளை கோட்டிற்கு முன் நிற்க வேண்டும்.
பச்சை – செல். வாகனங்கள் செல்லலாம்.
மஞ்சள் – கவனி என்றுதானே நினைக்கிறீர்கள். ஏறக்குறைய அதுதான், ஆனால் மேலும் சற்று தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மஞ்சள் விளக்கு எரியும்போது, நாம் அகலவாக்கில் இருக்கும் வெள்ளைக் கோட்டைத் தாண்டி இருந்தோம் என்றால், நாம் அந்தச் சந்திப்பைக் கடந்து விடலாம். மாறாக, மஞ்சளின் போது நாம் அந்த வெள்ளைக் கோட்டிற்கு முன்னால் இருந்தால், கோட்டிற்கு முன்பே வாகனத்தை நிறுத்திவிட வேண்டும்.
விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு திட்டத்தின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறையினர் கருமதாம்பட்டி துணை பிரிவு சூலூர் காவல் நிலையம் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து பப்பம்பட்டி பிரிவில், புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல் போஸ்ட் நிறுவப்பட்டது. கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் ஐ.பி.எஸ் இன்று 11.30 மணிக்கு சிக்னலைத் திறந்து வைத்தார். இந்த சிக்னல் தானியங்கி முறையில் பொருத்தப்பட்டு, அனைத்து கோணங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்