சென்னை : கொரோனா பரவல் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது மாநகர பேருந்துகள் சென்னையில் இயங்காமல் இருந்தன. தற்சமயம் தளர்வுகள் வழங்கப்பட்டு மாநகர பேரூந்துகள் இயங்குவதாலும் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுவதாலும் சாலை விபத்துக்கள் அடிக்கடி உண்டாகிறது. இவ்வாறு உண்டாகும் விபத்தினை தடுக்கவும் பேரூந்துகள் சீராக செல்லவும் அம்பத்தூர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் மா.சீனிவாசன் அவர்கள் தன் முயற்சியில் சி.டி.எச். சாலையில் பாடி லூகாஸ் டி.வி.எஸ் முன்புறம் காலியான ஆயில் பேரல்களால் தடுப்புக்கள் அமைத்து உள்ளார். இதனை இங்குள்ள நிறுவன ஊழியர்களும், மாநகர பேரூந்து ஒட்டுநர்களும் மற்றும் பொது மக்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
நமது குடியுரிமை நிருபர்

S. வீரமணி
குடியுரிமை நிருபர்















