சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் (04.12.2019) அன்று முகாம் அலுவலகத்தில், சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் பணியாளர்களின் மூலமாக திரட்டப்பட்ட நிதியினை வழங்கினார் .
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் (04.12.2019) அன்று முகாம் அலுவலகத்தில் கடந்த (20.11.2019) அன்று சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் திரு.பழனிகுமார் அவர்களின், மனைவி திருமதி விமலா அவர்களுக்கு சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் பணியாளர்களின் மூலமாக திரட்டப்பட்ட நிதியான 22 லட்சத்து 7 ஆயிரத்து 700 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., காவல்துறை கூடுதல் ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) திரு.ஆர் .தினகரன் இ.கா.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்