செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூரை சேர்ந்த அமரர் ராம்கி என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். இவர் சென்னை ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த மே மாதம் 3-ஆம் தேதி இரவு, பணி முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அறிந்த 2013-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் மற்றும் சக காவலர்கள் சமூக வலைதளங்களான டெலகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலமாக இந்த விவரத்தை பதிவிட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து காவலர்கள் தங்களால் இயன்ற பண உதவியை ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தி வந்தனர்.அவ்வாறு செலுத்தப்பட்ட பணம் ரூபாய் 7.14 லட்சம் சேர்ந்தது. இதை ராம்கி அவர்களின் குடும்பத்தாரிடம் மே 20-ஆம் தேதி 2013-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் மற்றும் சக காவலர்கள் இணைந்து அந்தப் பணத்தை ஒப்படைத்தனர்.
குடும்பத்திற்கு ஒன்றிணைந்து உதவிய அனைவருக்கும் தென் மண்டல காவல் துறை சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.