சென்னை : சென்னை பெருநகர காவல்துறையும் ஆக்ஸிஸ் வங்கியும் இணைந்து வாய்க்கு போடுங்க பூட்டு எனும் குறும்படம் வெளியீட்டு விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த குறும்படத்தை வெளியிட்டார். பின்னர் பேசிய காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன்,
இன்று பொது மக்கள் சந்திக்கும் பெருமளவு இணைய வழி குற்றங்கள் தங்களது வங்கி ஏடிஎம் கார்டு தகவல்கள் மற்றும் கடவுசொல்களை தெரியாத நபர்களிடம் பகிர்வதில் நடைபெறுகிறது.
காவல்துறை சைபர் கிரைம் புகார்களில் 80% வங்கி தொடர்பான புகார்கள் தான், எனவே பொதுமக்கள் தங்களது வங்கி தொடர்பான தகவல்களை கவனமாக கையாள வேண்டும்.
சிசிடிவி மூலம் பெருமளவு குற்றங்கள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுபோன்ற இணையவழி குற்றங்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறோம் என தெரிவித்தார்.இந்நிகழ்வில் திரு ட.ஹரிகுமார்,ஆக்சிஸ் வங்கி, திருமதி. S. சுமதி தெற்கு மண்டல தலைமை அதிகாரி ஆக்சிஸ் வங்கி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை