திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் உயர்திரு.ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் வட்டாட்சியர் திரு.சுப்பிரமணிய பிரசாத் அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கும் புதிய செயலி பயன்படுத்துவது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
இந்த செயலியை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை சரி பார்க்கவும், அதில் ஏதும் திருத்தம் இருந்தால் அந்த செயலி மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து செயலியை பதிவிறக்கம் செய்யலாம்