சிவகங்கை : கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிவகங்கை தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாலூர், பெருமாள்பட்டி, திருமலை மற்றும் மதகுபட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மதகுபட்டி, கீழப்பூங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் காவலர் எனக் கூறிக்கொண்டு அவ்வழியே வந்த வியாபாரிகள், இளைஞர்கள், பெண்கள் என பலரிடம் ரொக்கமாகவும், செல்போன் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்ததாக காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. இதுதொடர்பாக சிவகங்கை அருகே கூட்டுறவுபட்டியை சேர்ந்த அருண்பிரசாத் மீது வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதனையடுத்து பெருமாள்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அருண் பிரசாத்தை போலீசார் 08.04.2020 அன்று சுற்றிவளைத்தனர். அவர்களிடம் தப்பி இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது திருமலை அருகே சாலையில் அருகே உள்ள பள்ளத்தில் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது.
அருண் பிரசாத்தை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார் தொடர் விசாரணையில், காவலர் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மேற்படி நபர் மீது u/s 392,397-IPC-ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து பணம், செல்போன் உள்ளிட்ட பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்