மதுரை : ஜனவரி 2020ல் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சிறு குறைபாடுகள் இருந்த வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் ? கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றைய தினம் மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்., திரு.N.மணிவண்ணன்.IPS., அவர்கள் தலைமை தாங்கி 59 வாகன ஓட்டிகளுக்கு கண் கண்ணாடிகள் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து பேசிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாகன ஓட்டிகள் உயிரின் மதிப்பை உணர்ந்து போக்குவரத்து, சாலை விதிகளை கண்டிப்பாக பின்பற்றி செயல்பட வேண்டும். ஓர் உயிர் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றுவது, பாரங்களை ஏற்றுவது சட்டப்படி குற்றம் என்று கூறி எச்சரித்தார்.
மேலும் அவர் கூறுகையில் மதுரை மாவட்டத்தில் விபத்தின் சதவீதத்தை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.
இந்த முகாமில் ADSP.,திருமதி. வனிதா, அவர்கள், DSP., திருமதி. வினோதினி, அவர்கள் மற்றும் பல்வேறு காவல்துறை ஆளிநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்