திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் கண்காணிப்பாளர் உயர்திரு.சக்திவேல் அவர்கள், சாலைகளில் கால்நடைகளை மேயவிட்டால் உரிமையாளருக்கு அபராதம் என்ற உத்தரவின் படி திண்டுக்கல் நத்தம் சாலை பென்னாகரம் பகுதியில் திண்டுக்கல் நகர தாலுகா காவல் நிலையசார்பாக ரோந்து பணியின் போது சாலைகளில், கால்நடைகள் குருக்கு நெருக்குமாய் சென்றதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த மாடு ஒன்றினை தாலுகா சிறப்பு உதவிஆய்வாளர் திரு.கருப்பசாமி அவர்களது தலைமையில், இதரகாவலர்களான காவலர் திரு.பாண்டிய ராஜ் மற்றும் நத்தம் Highway Patrol ரோந்து வாகன காவலர்கள் ஒத்துழைப்போடு அம்மாட்டினை தாலுகா காவல்நிலையம் வசம் சிறைபிடிக்கப்பட்டது . அம்மாட்டின் உரிமையாளர் யார் என்பதையும் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா