திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது வீதி ராஜாஜி நகரைச் சேர்ந்த சரஸ்வதி(93) வயதான மூதாட்டி ஒருவர் அதிகாலை நேரம் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த சமயம் எழுந்து வெளியே வந்தவர், யாரிடமும் சொல்லாமல் வயது முதிர்வின் காரணமாக தனியே வெளியே நடந்து வந்தவர், மீண்டும் வீட்டிற்கு வழி தெரியாமல் சுற்றி தெரிந்தவரை தெற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் காவலர் திரு.கணேசன் ஆகியோர் விசாரிக்க தன்னுடைய பெயர் விலாசத்தை மாறிமாறி தெரிவித்த வரை அவர் கொடுத்த தகவலை வைத்து தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அறிவுரையின் பேரிலும் தங்களது முயற்சியினாலும் மேற்படி சரஸ்வதி (93) என்பவரை அவரது மகள் விஜயா என்பவருடன் தக்க அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த செயலை செய்த காவலர்கள் மற்றும் ஆய்வாளரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) மற்றும் மாநகர காவல்துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள் .