கோவை: கோவை மாவட்டம்,சூலூர் பகுதியில் கடந்த (18.10.2024) அன்று கலங்கல் அருகே செல்லக் கரச்சல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(42). என்பவர் இருசக்கர வாகனத்தில் கலங்கல் பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூபாய் 1000/- பணத்தை வழிப்பறி செய்துள்ளார். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் சூலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இவ்வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் காவலர்களைக் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு. மேற்படி வழிப்பறியில் ஈடுபட்ட எதிரியை தேடி வந்த நிலையில் இன்று(19.10.2024) கலக்கல் சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த அன்பு செல்வம் மகன் மணிகண்டன்(22). என்பவர் மேற்படி வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் மேற்படி நபரை கைது செய்து அவரிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தி-1 மற்றும் ரூபாய் 1000/- பணத்தை பறிமுதல் செய்தும், மேலும் மேற்படி மணிகண்டனுடன், குமார் மகன் முத்துப்பாண்டி (20). மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் திருச்செல்வம் (20). ஆகியோர் சூலூர் வட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்தது. இந்நிலையில் மேற்படி இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருட்டு வழக்கில் தொடர்புடைய இருசக்கர வாகனங்கள்-2 பறிமுதல் செய்தும் மேற்படி மூவரையும் காவல்துறையினர் நீதிமன்ற காவல் உட்படுத்தினர். சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்