சிவகங்கை: சிவகங்கை மாவட்ட, சீயர் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த சௌந்தரவல்லி என்பவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் கூவாணிப்பட்டி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது சில அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சௌந்தரவல்லி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் 09.12.2019 அன்று அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் u/s 392 IPC-ன் கீழ் வழக்குப் பதிந்தனர்.
இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெறுவதை அறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
சிவகங்கை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தபோது சிவகங்கை அருகே சக்கந்தி மில் கேட் பகுதியில் 14.02.2020 அன்று செயின் பறிப்பில் ஈடுபட்ட போது தனிப்படை போலீசாரிடம் பிடிபட்டனர்.
பிடிபட்ட நபர்களை சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதுபோன்ற சிவகங்கையில் நடந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வரவே சிவகங்கை நகர் காவல் நிலைய போலீசார் 15.02.2020 அன்று பிரபுதேவா மற்றும் சோனைமுத்து ஆகிய இருவரை கைது செய்து ,சிறையில் அடைத்தனர்.
மேலும் மேற்படி நபர்களிடமிருந்து வழிப்பறி சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 3.5 பவுன் தங்க செயினை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர் . இச்செய்தியை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்