மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி கடந்த 21.11.2019 அன்று ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினர் பாலியல் தொழில் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணியில் இருந்தபோது வலைத்தளம் மூலமாக மதுரைமாநகரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி, கோச்சடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு ஒரு ஆணும், மூன்று பெண்களும் இருந்தது தெரியவந்தது.
மேலும் அங்கு இருந்த ஆண் காவல்துறையினரை பார்த்தது கத்தியை காட்டி மிரட்டியதாகவும், மூன்று பெண்களும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், ரோந்து பணியில் இருந்த மற்றகாவலர்கள் மூலம் நான்கு நபர்களையும் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தங்களது பெயர் ரவி (31), ஈஸ்வரி (50), கலா (28), ஜோதிலட்சுமி (23) என தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், வலைத்தளம் மூலமாக பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதித்து அதன்மூலம் பிழைப்பு நடத்தி வருவதாகவும், நான்கு நபர்களும் ஒப்புக்கொண்டனர். எனவே நான்கு நபர்களையும் கைதுசெய்து அவர்களிடமிருந்து நான்கு செல்போன்கள் கைப்பற்றப்பட்டு நேற்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை