விழுப்புரம் : விழுப்புரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் கிராமம் என்ற ஊரைச்சேர்ந்த பெண்ணரசி என்பவர் இன்று 09.03.2020 தேதி ரூபாய் 32,000 பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பணத்தை பறிக்க முயன்றபோது, பெண்ணரசி என்பவர் அலறி சத்தம் இட்டதால், அருகில் இருந்தவர்கள் அந்த அடையாளம் தெரியாத நபரை பிடிக்க முயற்சித்தபோது, அவர்கள் தப்பி ஓடி விட்டனர். அப்பெண்மணியின் துணிவு மிக்க செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார். ரூபாய் 32,000 பணம் சரி பார்த்து அப்பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.