திருப்பூர்: திருப்பூர் மாநகர போயம்பாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் காவல் நிலைய காவலர்கள் வாகன தணிக்கை இரவு அலுவலில் இருந்த போது அவ்வழியாக வடமாநில இளைஞர்கள் நடந்து சென்றனர். அவர்களை விசாரித்தபோது மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், சாப்பாட்டிற்கு ஆதாயம் இல்லாததால் நடந்தே தங்களது ஊருக்கு செல்வதாகவும் கூறினார்கள்.
அப்போது பணியில் இருந்த முதல் நிலை காவலர் 664 திரு. பழனிச்செல்வம் மற்றும் காவலர் 841 திரு.குகநாதன் அவர்கள் நிலைமையை எடுத்துக்கூறி, அனுப்பர்பாளையம் ஆய்வாளர் அவர்கள் அறிவித்தலின்படி வட மாநிலத்தவர்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய காய்கறிகள் கொடுத்து உதவினார்கள். உதவியை பெற்று கொண்ட வடமாநில இளைஞர்கள் காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த செயலை செய்த காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.