ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் உபயோகித்தல் பற்றி பெயர் அல்லது முகவரி துல்லியமாக பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் 9498919722 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பது அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், இ.கா.ப., அவர்களால் 5000/- ரூபாய் சன்மானமாக தகவல் தெரிவிப்பவர்கள் வழங்கப்படும். மேலும் தகவல் தெரிவிப்பேன் விவரம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
மேலும் 2009 நவம்பர் மாதத்தில் இந்நாள்வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 11 குற்றவாளிகளை கைது செய்து, 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து தோராயமாக, 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.நம்பு குமார்