சேலம் : தற்பொழுது ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களை தொடர்பு கொண்டு “நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம்” என்று கூறி தங்களது ஏடிஎம் பின் நம்பர், அக்கவுன்ட் நம்பர் போன்றவற்றை கேட்கிறார்கள், நமது வங்கிக் கணக்கு தகவல்களை கூறுவதன் மூலம் நொடிப்பொழுதில் நமது வங்கி கணக்கில் உள்ள பணம் அவர்களது வங்கி கணக்கிற்கு சென்று விடும். இது போன்று வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று கூறி வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை யார் கேட்டாலும் சொல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.