விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் MSc (Agri) அவர்கள் மாதம் இருமுறை மாவட்டத்தில் மெச்சத்தகுந்த நற்பணியாற்றிய காவல் அலுவலர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளிப்பது வழக்கம் அந்த வகையில் 16.02.2020 முதல் 29.02.2020 வரை மெச்சத்தகுந்த நற்பணியாற்றியவர்களை இன்று 03.03.2020 தேதி நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார்.