தென்காசி : ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான நெட்டூரை சேர்ந்த முத்துராஜ் @ ஆண்டவர் என்பவர் கடந்த 12/02/2016 அன்று மூன்றுபேரை கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் திரு. ஆதிலிங்க போஸ் அவர்கள் தலைமையிலான போலீசார் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், 28/02/2020 அன்று முத்துராஜ் @ ஆண்டவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் குற்றங்களை குறைக்கும் விதமாக அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதித்து உயர்திரு. நீதிபதி, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், தென்காசி அவர்கள் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
மேலும் வழக்கின் விசாரணையை திறம்பட மேற்கொண்ட ஆலங்குளம் போலீசாரை நீதிபதி அவர்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. சுகுணா சிங் அவர்கள் மேற்படி தீர்ப்பினை வரவேற்றதோடு, நீதிபதி அவர்களுக்கு பாராட்டுதலை தெரிவித்தார்.
ஆலங்குளத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்