கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல்கோட்டம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள பழைய இரும்பு மார்க்கெட்டில் உள்ள பழைய இரும்பு கடையில் நேற்று 17.03 2020 ஆம் தேதி மாலை சுமார் 04.30 மணிக்கு ஒரு வயதான மூதாட்டி சரஸ்வதி என்பவரிடம் இருந்து சுமார் ஒன்றரை பவுன் எடை உள்ள தாலி கயிற்றில் உள்ள தங்க கொலச்சிகள், தங்க காசுகள் மற்றும் தாலியை கத்தியை காட்டி பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் செய்த விட்டுச் சென்ற இருவர் மீது பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய குற்ற எண் 75 /2020 U/S 392,506(ii) IPC இன் படி வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் திரு. வைரம் அவர்கள் புலன் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் அவர்களின் உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. கே ஜி சிவகுமார் அவர்களின் தலைமையில் மேற்கு காவல் ஆய்வாளர் திரு.வைரம் அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.சின்னகாமணன்,திரு .கார்த்திக் குமார் மற்றும் போலீசார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று சாட்சிகளிடம் விசாரணை செய்தும் சம்பவ இடத்தில் அமைந்துள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் பொள்ளாச்சி ஜோதிநகர் காலனியைச் சேர்ந்த வெள்ளைங்கிரி மகன் அரவிந்தன் என்றும் மாக்கினாம்பட்டி நேரு நகரைச் சேர்ந்த காளியப்பன் மகன் செல்வராஜ் என்றும் தெரியவந்தது.
மேற்கண்ட தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு கொள்ளுபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மேற்படி எதிரிகள் இருவரையும் கைது செய்து களவு செய்யப்பட்ட சுமார் ஒன்றரை பவுன் எடை உள்ள மேற்கண்ட பொருட்களை கைப்பற்றி கைப்பற்றியுள்ளனர்.
இவர்களது உயரதிகாரிகள் பாராட்டும் படியாக இருந்தது அவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் எண் 2 அவர்கள் முன்பாக ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்