திருநெல்வேலி: திருநெல்வேலி இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் மழை காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுவதால் இனிவரும் காலங்களில் விபத்து ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்குநேரி நெடுஞ்சாலை ரோந்து காவல்துறை பிரிவைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு ஜெயபாண்டி, HC 1392 முருகேசன்,GR I 2390 சங்கர்,PC 3136 ரவிசங்கர்,PC 3126 கிருஷ்ணகுமார் ஆகியோர் வாகைகுளம்’ பகுதியில் உள்ள நீர் தேங்கிய சாலையில் முட்புதர்களை அகற்றி நீர் தேங்கா வண்ணம் பாதை அமைத்தனர்.
பின்னர் காவல்கிணறு விளக்கு பகுதியில் கன்னியாகுமரி நாகர்கோவில் பிரிவு சாலையில் சென்டர் மீடியனில் safty board இல்லாத காரணத்தினால் வாகனங்கள் சென்டர் மீடியனில் ஏறி அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.இதனை தடுக்கும் வண்ணமும் காவலர்கள் குழி அமைத்து காங்கிரிட் கலவை கலந்து safty board( ஒளிச்சிதறல் பலகை)யை நிறுவினார்கள்.