திண்டுக்கல் : திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று நகர போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களது தலைமையிலான காவலர்கள், வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திண்டுக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையின் வளாகத்தில், குழந்தைகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகள் அனுமதிக்கப்படும், அறையின் பக்கவாட்டில் அமைந்துள்ள சாலையில் அதிக சத்தம், இரைச்சலுடன் கூடிய ஒலிபெருக்கி மூலம் பழ வியாபாரி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
இதனை கண்ட போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார், சிகிச்சை பெற்று வரும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறாக இருக்கும், ஒலிப்பெருக்கி போன்றவற்றை அகற்றினார். வாகனங்களில் இருந்து ஒலிபெருக்கி அதனை சார்ந்த பொருட்களையும் பறிமுதல் செய்தார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமாரை அங்கு இருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா